Tuesday, November 07, 2006

சென்னையில் ஓரு மழை காலம்..


அழகிய காலை பொழுது
மின்சார ரயிலில் தொடங்கியது
எனது பயணம்

கடற்கரை சந்திப்பை நோக்கி புறப்பட்டது ரயில்
கடலுக்கு அப்பால் சென்று ஒளிந்து கொண்டது வெயில்

தெருவில் நடந்து சென்றேன் நான்
மழை பொழிந்து வரவேற்றது வான்

மழையில் நனைந்தேன்
உலகம் மறந்தேன்

சுயநினைவை இழந்தேன்
இன்ப வெள்ளத்தில் விழுந்தேன்

மழையே! உனை நான் ரசித்தேன்
மழைத்துளியே! உனை நான் ருசித்தேன்

ஒவ்வொரு துளியும் இனிமை
ஒவ்வொரு துளியும் புதுமை

கண்ணீர் ருசியை நான் அறிந்தில்லை
மழைநீர் ருசியை சொல்ல நான் கவிஞனும் இல்லை

அன்று மழையில் வழிந்தது என் இளமை
மழை எனக்கு உணர்த்தியதோ.... என் தேசத்தின் வறுமை!

நான் அறிந்தேன்,
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவர்களிடம் இவை இல்லை என்று

நான் அழுதேன்,
இவர்களின் நிலை கண்டு

நான் உணர்ந்தேன்,

கண்ணீர் மழைநீரோடு கலந்தது
மனதில் புது வேகம் பிறந்தது

நான் எழுந்தேன்,

என் தேசத்தின் வறுமை ஒழிக்க
என் மக்களின் வாழ்வு செழிக்க
ஏழைகளின் கண்ணீர் போக்க
துயர் மறக்க, புது வழி பிறக்க!


Note:
Special Thanks to Mathi for Spell Check and Thiru for Tamil Fonts/Data Entry :-)

5 comments:

Anonymous said...

good da bala..
last few lines were really great..
IAS aaga en vazthukkal...

idhu nee ezhutuna kavithai thaana : )

Nivi said...

hey paavi... yaarun kitte erundhu sutte???? superb kavidhai...

Girl of Destiny said...

Yea nivi, still cant believe that he wrote it!
;-)

Anonymous said...

Haiyo haiyo!!!
Trying to write kavidai..Well tried ;)

Aysh

Bala said...

Hey Niv,
this is my sondha sarakku.. though few phrases sound quite familiar, its 100 % my own !

Thanks Mathi for pointing out the spelling mistake even after the blog was published. . Librans are good at pointing out mistakes..:))

Mr. Anonymous..thanks for your wishes.. But i would ve been happy if u had included your name there. Senthil is that u ?


Aysh.. i din try kavidhai.. my concern was the msg, but it turned out to be in poetry style..:)